தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-02-17

WiFi Network ஐ வேறு யாரும் உபயோகிக்காமல் தடுக்க இலகு வழி

wifisecurity3
WiFi Network இனை வீட்டிலோ, அலுவலகத்திலோ உபயோகிப்பவரா நீங்கள்? அப்படியாயின் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லேப்டாப், மொபைல்களில் Wifi Network மூலமான இணைய இணைப்பு மிகவும் இலகுவான ஒன்றாகும். அதோடு பல கணினிகளுக்கான Network இணைப்பின்போது அதிக கேபிள்களை பயன்படுத்துவதை விட WiFi இலகுவானதாக இருக்கிறது. இப்படி பல வகைகளில் உபயோகமானதாக இருந்தபோதிலும் சில வழிகளில் ஆபத்தையும் தேடித்தருகிறது. Wifi Network இனை நாம் எவ்வளவு பாதுகாப்பாக கடவுச்சொல் கொடுத்து வைத்திருப்பினும், அந்த பாதுகாப்பை உடைத்து உள்நுழைவது இலகுவானது. 

உங்கள் வீட்டிற்கு/ அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் யாராவது இப்படி உள்நுழைந்தால் உங்கள் இணைய வசதியினை இலவசமாக அவர் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். அவருக்கும் சேர்த்து நீங்கள் பணம் செலுத்தவேண்டி வரலாம்.

அது பிரச்சினை இல்லை, நான் Unlimited Data Plan தான் உபயோகிக்கிறேன். யாராவது என் WiFi இணைப்பை உபயோகித்தால் பிரச்சினை இல்லை என்கிறீர்களா? உங்கள் WiFi கடவுச்சொல்லை உடைத்து உள்நுழைந்தவர் உங்கள் கணினியில் இருக்கும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடமுடியும், உங்கள் இணைய கணக்குகளை பார்வையிடமுடியும், அவற்றுக்குள் நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும், கணினியில் உங்களது ஒவ்வொரு செயற்பாட்டையும் கண்காணிக்கமுடியும்.

சரி..! கடவுச்சொல்லும் கொடுத்து பாதுகாப்பது கடினம்… அப்போ என்ன செய்யமுடியும்? யாராவது உங்களுக்கு தெரியாமலே உங்கள் Wifi இணைப்பை உபயோகிக்கிறார்களா? யார் உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்தால் தடுப்பது இலகுவாகிவிடும் அல்லவா? அதற்காகவே வந்திருக்கிறது ஒரு மிகச்சிறிய மென்பொருள். SoftPerfect WiFi Guard என்னும் இம் மென்பொருள் மூலம் உங்கள் WiFi இணைப்பினை யார் உபயோகிக்கிறார்கள் என்பதனை இலகுவாக கண்காணிக்கமுடியும்.

கீழே தந்துள்ள தரவிறக்க இணைப்பின் மூலம் இம் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியதும் Open பண்ணி Scan Now என்பதை கிளிக் பண்ணுங்கள். சிறிது நேரத்தில் உங்கள் WiFi Network இல் இணைந்துள்ள அனைத்து சாதனங்களையும் பட்டியலிடும்.



இதில் பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுபவை உங்கள் கணினியுடன் சம்மந்தப்பட்ட சாதனங்கள். சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுபவை அடையாளம் தெரியாத சாதனங்கள். அவற்றில் Right Click செய்து Properties செல்வதன் மூலம் அந்த சாதங்களின் IP Address இனை அறிந்துகொள்ளலாம். அவை உங்கள் சாதனங்களாக இருக்கும்பட்சத்தில் i know this computer or devise என்பதை தெரிவு செய்யலாம்.



மேலும் All Devices என்ற பகுதிக்கு செல்வதன் மூலம் அடையாளம் தெரியாத IP Address இனை பற்றிய மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். அப்புறம் என்ன ? யாராவது உங்கள் WiFi Network ஐ உபயோகிப்பது தெரிந்தால் உடனடியாக கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள். IP Address மூலம் அந்த நபரை அடையாளம் காணமுடிந்தால் அவரிடம் பேசி முடிவெடுக்கலாம்…

தரவிறக்க இணைப்பு : SoftPerfect WiFi Guard

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக