தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-02-17

கணினியில் Audio வேலை செய்யவில்லையா? இதோ தீர்வு

klipsch-hd-theater-500-smal

உங்கள் கணினியில் Audio வேலை செய்யவில்லையா? இப்பிரச்சினையை இலகுவாக சரி செய்துகொள்ளலாம். பதிவில் குறிப்பிட்டுள்ள படிமுறைகளை கையாளுவதற்கு முன்னர் Windows sound troubleshooter மூலம் ஒரு தடவை முயற்சி செய்துவிடுங்கள். என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதையும், தீர்வையும் Windows sound troubleshooter இலகுவாக கண்டுபிடித்துவிடும்.
கணினியில் Audio வேலை செய்யாததற்கு சில அடிப்படையான காரணங்கள் உள்ளன.



சிலவேளை உங்கள் கணினியில் Volume Mute பண்ணப்பட்டு இருக்கலாம்.
நீங்கள் Play பண்ண முயற்சிக்கும் ஒலிக்கோப்பில் பழுதுகள் இருக்கலாம். இதன் காரணமாகவும் ஒலி வராது.
உங்களுடைய Audio கருவிகளில் ( Speakers, Head Phones) பழுது இருக்கலாம்
Audio கருவிகளை கணினியுடன் இணைக்கும் Cable களில் பழுது இருக்கலாம்
Cable கள் சரியான முறையில் கணினியுடன் இணைக்கப்படாமல் இருக்கலாம்
Soundcard நிறுவியிருந்தால் அதற்கான Driver இல்லாதிருக்கலாம். Onboard Sound ஆக இருப்பின் அதற்குரிய Driver இல்லாமல் இருக்கலாம்.
Sound Card நிறுவியிருந்தபோதிலும் அது Bios பகுதியில் Off செய்யப்பட்டிருக்கலாம்.
இனி இதற்கான தீர்வுகள் என்ன? எப்படி சரி செய்வது என்பது பற்றி பார்ப்போம்



கணினியில் சரி பார்ப்பதற்கு முன்னர் உங்கள் Audio கருவிகளிலோ அல்லது அவற்றின் Cable களிலோ எந்த பழுதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உறுதிப்படுத்த அவற்றை வேறு ஒரு MP3 Player உடன் இணைத்து பரிசோதியுங்கள்
ஒரு தடவை கணினியை மீளியக்கம் செய்து ( Restart) பிரச்சினை சரியாகிறதா என பாருங்கள். Audio கருவிக்கான Cable கணினியுடன் சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்கின்றதா என பாருங்கள். 


Volume Level உயர்வாக உள்ளது என்பதையும், Mute பண்ணுப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேறுபட்ட ஒலிக்கோப்புகளை Play பண்ணி பாருங்கள்.
Sound Card நிறுவியிருந்தால் அது Slot இல் சரியான முறையில் பொருந்தியுள்ளதா என்பதை அவதானியுங்கள். அல்லது Audio Cable சரியான முறையில் இறுக்கமாக Audio Port இல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவதானியுங்கள்
Audio Cables சரியான முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும் அவை அவற்றிற்குரிய Port இல் தான் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை பாருங்கள். வழக்கமாக Ping வர்ண Port இல் Microphone Cable உம், பச்சை வர்ண port இல் Speakers அல்லது Headphone உம் இணைக்கப்படும்.


Sound Card இற்குரிய configuration சரியான முறையில் செய்யப்படாதிருக்கலாம். Task Bar இல் Volume button இல் Right Click செய்து Playback Devices செல்லுங்கள். அதில் சரியான Playback Device இனை தெரிவு செய்து Set ad Default கொடுங்கள். பின்னர் Ok கொடுங்கள். அப்படியும் சரி ஆகவில்லை என்றால் மறுபடியும் மேல் சொன்ன படிமுறையில் சென்று வேறு ஒரு Playback Device இனை தெரிவு செய்யுங்கள். அடுத்ததாக சரியானது என்று நீங்கள் கருதும் Playback Device மீது Right Click செய்து Properties சென்று Audio Level, Channel Cofigaration அனைத்தும் சரியாக இருக்கின்றதா என பரிசோதியுங்கள்.


Desktop இல் My Computer மீது Right Click செய்து Manage செல்வதன் மூலமோ, RUN இல் Devmgmt.msc என டைப் பண்ணி Enter பண்ணுவதன் மூலமாகவோ Device Manager பகுதிக்கு செல்லுங்கள். அதில் ”Sound, video, and game controllers” என்று இருக்கும் பகுதியை Expand பண்ணுங்கள். அங்கே எதிலாவது மஞ்சல் வர்ணத்தில் கேள்விக்குறி அடையாளம் இருக்கிறதா என பாருங்கள். அப்படி இருந்தால் வன்பொருள் அல்லது மென்பொருள் ஏதோ ஒன்றில் பழுது ஏற்பட்டிருக்கிறது. System Restore மூலம், ஏற்கனவே Audio சரியாக வேலை செய்த ஒரு தினத்திற்கு Restore பண்ணி பாருங்கள்.


தொடர்ந்தும் பிரச்சினை ஏற்பட்டால் Sound Card இற்குரிய Driver சரியாக நிறுவப்படவில்லை. ஆகவே Driver ஐ மறுபடி ஒருதடவை நிறுவிக்கொள்ளுங்கள். இணையத்தில் குறித்த Sound Card இற்குரிய அப்டேட் பண்ணப்பட்ட Driver இருந்தால் தரவிறக்கி நிறுவுங்கள்.


இதன் மேலும் பிரச்சினை தொடர்ந்தால் உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தை ஒரு தடவை மீள்நிறுவல் செய்யுங்கள்.


அடுத்த பகுதியில் இன்னுமொரு கணினி பிரச்சினை சம்மந்தமாக பார்ப்போம்

1 கருத்து:

  1. salam Bro I'm using W7 , i install sound driver (real tech) but it shownig like this "No audio Out put device is installed " pls help .& before i used xp it dosen't install a video driver but working sound driver
    Note:My 1st W7 installed time that driver was installed and worked succesfully
    pls pls pls help sitham .E-mail.najmudeenijas@gmail.com
    T.P-94752274399 (if u call pls in 3 p.m - 7.am.)

    பதிலளிநீக்கு