தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-02-17

SD Card பழுதடைவதற்கான அறிகுறிகளும் மீட்பதற்கான வழிகளும்

article-new_ehow_images_a06_51_uc_recover-corrupt-sd-memory-card-800x800
SD Card நீங்கள் அனைவரும் அறிந்த/ உபயோகித்த Memory Chip தான். அதிகமாக Camera, Mobile Phones போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. Flash Memory களோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறிய அளவுடையதாகவும், அதிகளவு கொள்திறன் கொண்டதாகவும் இருப்பதால் அதிகம் மொபைல் சாதனங்களில் உபயோகிக்கப்படுகிறது.

இவற்றின் திறன் எவ்வளவுதான் அதிகமாக இருப்பினும் அவற்றிற்கும் பாதிப்புக்கள் வருமல்லவா? தவறான முறைகளில் கையாளுவதாலும் வேறு சில பிரச்சினைகளாலும் ஒரு கட்டத்தில் SD Card பழுதடைய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இதன்போது அவற்றில் சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதிப்படைகின்றது. இப்படி முற்றுமுழுதாக பழுதடைந்துபோன SD Card ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை மறுபடியும் பெற்றுக்கொள்வது என்பது 100% முடியாத காரியம்.

ஆனால் SD Card பழுதடையப்போகின்றது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அதை பற்றி விரிவாக பார்ப்போம்

பழுதடையப்போகும் SD Card இன் அறிகுறிகள்
SD Card ஐ நீங்கள் Camera வில் உபயோகிக்கிறீர்கள் என்றால், நீங்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும்போது Camera ஸ்கிரீன் கறுப்பு வர்ணத்தில் காட்சியளிக்கும். 

மேலதிகமாக எந்த வேலையையும் Camera வில் செய்யமுடியாது
SD Card இல் இருந்து ஒரு சில File கள் காணாமல் போயிருக்கும்
SD Card ஐ கணினியில் இணைத்தால் Card இற்கான Directory இருக்கும். Open பண்ணினால் அங்கே ஏற்கனவே இருந்த Folder களை காணமுடியும். அவற்றை Open பண்ண முயற்சித்தால் ஏதாவது Error Message வந்து Open பண்ண்முடியாமல் போய்விடும்

சிலவேளைகளில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து File களும் இருக்கும். ஆனால் அவற்றை Open பண்ணினால் “Memory Card Error” என்ற Message வரும்.
சேமித்து வைக்கப்பட்ட அனைத்து File களும் அப்படியே இருக்கும். Camera விலோ அல்லது கணினியில் SD Card ஐ இணைப்பதன் மூலமாகவோ அதில் உள்ள File களை பார்வையிடக்கூடியதாக இருக்கும். ஆனால் அவற்றை வேறு எங்காவது Copy பண்ண முயற்சித்தால் Error ஆகும்.

கணினியிலோ, Camera விலோ இத்தகைய SD Card ஐ இணைக்கும்போது காரணமே இல்லாமல் Format பண்ணுவதற்கான Command வரலாம் ( Format பண்ணினால்தான் Card இனை உபயோகிக்கமுடியும்)
SD card ஐ கணினியில் இணைத்து பார்க்கும்போது அதில் சேமிக்கப்பட்டுள்ள File கள் எதையுமே காணமுடியாமல் இருக்கும்

( இந்த அறிகுறிகள் பழுதடைய போகும் SD Card இற்கு மாத்திரமல்ல, புதிதாக வாங்கிய போலி SD Card இலும் காணமுடியும்)

மேற்கூறிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பொதுவான சில காரணிகள்
கணினி, Camera வில் இருந்து சரியான முறையில் அகற்றப்படாமை ( File கள் Copy பண்ணிக்கொண்டிருக்கும்போதோ அல்லது வேறு உபயோகத்தில் இருக்கும்போதோ அகற்றுதல்)
வைரஸ் பாதிப்பு
நீண்டகால பாவனை (bad Sector உருவாகுதல்)
அதிக தடவைகள் Format பண்ணுதல்

இத்தகைய சந்தர்ப்பங்களில் Card இல் உள்ள File களை மீள பெறும் முறை
அநேகமாக பழுதடைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு சில File களை மாத்திரமே இழக்கவேண்டி இருக்கும். முழுமையாக பழுதடைய முன்னர் ஏனைய File களை வேறு ஓர் இடத்தில் சேமித்து வையுங்கள்
Data Recovery மென்பொருள்கள் மூலம் முயற்சித்து பார்க்கலாம். Professional மென்பொருட்களை உபயோகித்தால் சிறந்த பலனை பெறலாம்

. உதாரணம் ZAR 9 , Card Recovery, Stellar Phoenix 

சில வேளைகளில் SD Card இல் ஏற்பட்டுள்ள சிறிய பழுதுகளை சரி செய்வதன் மூலம் File களை மீள பெற்றுக்கொள்ளமுடியும். Card Reader ஒன்றின் மூலம் SD Card ஐ கணினியுடன் இணையுங்கள். பின்னர் My Computer சென்று SD Card உள்ள Drive இன் மீது Right Click செய்து Properties செல்லுங்கள். அடுத்து வரும் Wndow வில் Tools > Error Checking சென்று fixing file system errors என்பதை தெரிவு செய்யுங்கள். அதன் பின்னர் Start கொடுங்கள் ( இந்த Method வழக்கமாக File களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதில்லை. ஆனால் SD Card இல் மாத்திரம் பழுது ஏற்பட்டு File Recover பண்ணக்கூடிய நிலையில் இருந்தால் மீட்கமுடியும். ஆகவே முயற்சித்து பாருங்கள்)

இந்த முறைகளில் 100% File களை திருப்ப பெற்றுவிடமுடியும் என்று சொல்லமுடியாது. மீள பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என்றுதான் சொல்லமுடியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக