கணினியில் எந்த மென்பொருள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக அன்டிவைரஸ் போடாமல் இருக்க முடியாது. நமக்கு எப்படி நமது உடல்நிலைக்கு உணவு முக்கியமோ அந்தளவுக்கு கணினிக்கு ஆண்டிவைரஸ் முக்கியம். தற்சமயத்தில் காசு கொடுத்து வாங்கினாலும் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் உபயோகமாக செயல்படுவதில்லை. ஆனால் இலவசமாக வழங்கப்படும் அவாஸ்ட் ஆண்டிவைரசின் செயல்பாடு குறிப்பிடும்படியாக உள்ளது.
அவாஸ்ட் ஆண்டிவைரசின் புதிய பதிப்பாக 5 ஆம் பதிப்பு வந்துள்ளது. இதில் சில
காசு கொடுத்து வாங்கும் முண்ணனி ஆண்டிவைரஸ் களையே பின்னுக்கு தள்ளிவிடும் வசதிகளோடு வந்துள்ளது. நான் என்னுடைய kaspesky ஆண்டிவைரஸ் மென்பொருளை நீக்கிவிட்டு இதை நிறுவி பார்த்தேன்.
இதன் செயல்பாடுகள் முன்பை விட மிக நன்றாக இருந்தது.
இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.
இதன் மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம் ( user interface) முன்பை விட அழகாக உள்ளது. பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.
இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.
இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது. யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய புள்ளிவிவரங்களை
தருகிறது.
அவஸ்ட் தரவிறக்கச்சுட்டி :
http://www.avast.com/free-antivirus-download
இதை ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். இலவசமாக ஒரு வருடம் வரை அந்த லைசென்ஸ் எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இலவசமாக பதிவு செய்ய
இதை ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். இலவசமாக ஒரு வருடம் வரை அந்த லைசென்ஸ் எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இலவசமாக பதிவு செய்ய
http://www.avast.com/registration-free-antivirus.php
அவஸ்ட் மென்பொருளுக்கான தற்போதைய வைரஸ் அப்டேட்களை தரவிறக்க:http://www.avast.com/download-update
அவஸ்ட் மென்பொருளுக்கான தற்போதைய வைரஸ் அப்டேட்களை தரவிறக்க:http://www.avast.com/download-update
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக