தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-11-05

ஜாவா இன்ஸ்டால் செய்ய

http://www.digitaltrends.com/wp-content/uploads/2010/11/java-logo.jpg
இந்த வலைப்பதிவின் நோக்கமே நீங்கள் சரியான படி ஜாவாவைக் கற்றுகொள்ள வேண்டும் என்பதுதான். அதற்குப் படிப்பை போலவே பயிற்சியும் முக்கியமான ஒன்று.


இதைப்படிக்கும்போது நீங்கள் இதில் காணப்படும் ப்ரோக்ராம்களை முயன்று பாருங்கள். அதற்கு வேண்டிய முக்கியமான ஒன்றை இப்போது பார்க்கலாம்.



இப்போது நாம் பார்க்கப்போவது நம்முடைய கணினியில் ஜாவாவை எப்படி இன்ஸ்டால் செயவது என்பதை.


இதை JDK (Java Development Kit) என்று கூறுவார்கள். இது உங்கள் ப்ரோக்ராம்களை கம்பைல் (compile) செய்யவும் ரன் செய்யவும் பயன்படக்கூடிய பல கருவிகளையும் (Tools) மாதிரி ப்ரோக்ராம்களையும் கொண்டது.
நீங்கள் உங்கள் ப்ரௌசெரில் http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html என்ற வலைதளத்துக்கு செல்லுங்கள்.

நீங்கள் கீழ்க்காணும் பக்கத்தை பார்க்கலாம். இந்த பக்கத்தில் இருந்து நீங்கள் Java, JavaFX, Netbeans, Java EE போன்றவற்றை டவுன்லோட் செய்ய முடியும்.






நமக்கு தேவையானது JDK மட்டுமே. சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட இடத்தில கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் பார்க்கும் பக்கம் கீழே காணப்படுகிறது. இந்த பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்

Accept License Agreement - ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
பிறகு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து உங்கள் ஆபரேடிங் சிஸ்டமுக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள்.

என்னுடைய கணினியில் விண்டோஸ் 7 32 பிட் உள்ளது. அதனால்
windows x86 (32 bit) சிஸ்டமுக்கு ஏற்ற JDK-7u3-windows-i586.exe என்ற லிங்கை அம்புக்குறியிட்டு காட்டியிருக்கிறேன். உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.








டவுன்லோட் செய்த பைலை (JDK-7u3-windows-i586.exe) டபுள் கிளிக் செய்து ரன் செய்யுங்கள். இப்போது நீங்கள் கீழே பார்க்கும் விண்டோ உங்கள் திரையில் இருக்கும்.








"Next >" என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.






இந்த விண்டோவில் நீங்கள் எங்கே JDK ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று சொல்லலாம். இன்ஸ்டாலர் தேர்வு செய்த இடம் "c:\Program Files\Java\jdk1.7.0_03\". இதை மாற்ற "Change..." பட்டனை கிளிக் செய்யுங்கள். நான் தேர்வு செய்த இடம் "C:\Software\Java\jdk1.7.0_03\". என்னுடைய கணினியில் ஏற்கனவே ஒரு JDK (jdk1.6.0_17) உள்ளது.






OK பட்டனை கிளிக் செய்யுங்கள். கீழ்க்காணும் ப்ரோக்ரேஸ் விண்டோ கிடைக்கும்.






இன்ஸ்டாலேஷன் முடிந்தவுடன் நீங்கள் கீழ்காணும் விண்டோவில் "Product Registration Information" பட்டனை கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். அல்லது "Continue" பட்டனை கிளிக் செய்து தொடரலாம்.






இப்போது JavaFX இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். இது இன்ஸ்டால் ஆகும் இடத்தையும் நீங்கள் மாற்றலாம். அதற்கு "Browse ..." பட்டனை கிளிக் செய்யவும்.






"Next >" பட்டனை கிளிக் செய்ய இன்ஸ்டால் முடிவடையும்.


இப்போது கீழ்க்கண்டவற்றை செய்து முடிக்கவேண்டும்.


முதலில் JAVA_HOME என்ற environment variable செட் செய்ய வேண்டும். இதற்கு Desktop ல் உள்ள "Computer" அல்லது "My Computer" என்ற icon ஐ Right-Click செய்து Properties என்ற மெனு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பிறகு "Advance system settings" ல் "Environment Variables.." பட்டனை கிளிக் செய்ய வேண்டும். கீழே உள்ள "System Variables" லிஸ்டின் கீழே உள்ள "New " பட்டனை கிளிக் செய்து "Variable Name" என்ற இடத்தில் "JAVA_HOME" என்று டைப் செய்யவும். "Variable Value" என்ற இடத்தில நீங்கள் ஜாவாவை இன்ஸ்டால் செய்த இடத்தை கொடுக்கவும்.
நான் கொடுத்த இடம் "C:\Software\Java\jdk1.7.0_03".
OK ஐ கிளிக் செய்யவும்.


இப்போது நீங்கள் இந்த JAVA_HOME" ஐ "System Variables" லிஸ்டில் பார்க்கலாம்.


அடுத்ததாக "System Variables" லிஸ்டில் "Path " என்று இருப்பதை செலக்ட் செய்யவும். பிறகு Edit பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது"Variable Value" என்ற இடத்தில் இருப்பதன் கடைசியில் ";%JAVA_HOME%\bin\;"
என்பதை (சிவப்பில் இருப்பதை மட்டும்) டைப் செய்து சேர்க்கவும்.
OK ஐ கிளிக் செய்யவும்.


இப்போது நீங்கள் "Command Prompt " ல் சென்று java -version என்று டைப் செய்யவும். அப்போது உங்கள்ளுக்கு கீழ்க்காணும் அவுட்புட் கிடைக்க வேண்டும்.



Microsoft Windows [Version 6.1.7601]
Copyright (c) 2009 Microsoft Corporation. All rights reserved.


C:\>java -version
java version "1.7.0_03"
Java(TM) SE Runtime Environment (build 1.7.0_03-b05)
Java HotSpot(TM) Client VM (build 22.1-b02, mixed mode, sharing)



C:\>



நீங்கள் மேற்கண்டதை பார்க்கும் பட்சத்தில்.
கை கொடுங்கள் ! உங்களின் ஆரம்பம் மிக நன்றாக இருக்கிறது !


சரியாக வராதவர்கள் நண்பர்களிடம் உதவி பெறவும். Oracle வலை தளத்திலும் நீங்கள் உதவி பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக