Micorosoft Office பயன்படுத்தும் நிறைய பேருக்கும் இன்னமும் Microsoft Access எதற்க்கு பயன்படுகிறது என்று ஒரு கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் என்பது ஒரு சிறு தொழில் செய்பர்கள் தன் வணிக கணக்கை எண்ட்ரி செய்வதற்க்காக தானே ஒரு அக்கவுண்ட் பேக்கேஜை இந்த அக்ஸஸில் உருவாக்கிக்கொள்ளலாம்.
Small Finance Accounts, Inventory Record, Books Record, Movie & Audio Video Librery Record போன்றவற்றை தானே தன் விருப்பப்படி தினம் எண்ட்ரி செய்யக்கூடிய அளவிற்க்கு உருவாக்கும் ஒரு மென்பொருள்தான் Microsoft Access.
சரி முதலில் அக்ஸஸில் ஒரு சிறிய பற்று வரவு கணக்கை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
பாகம் 1
முதலில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸை திறந்து அதில் வரும் Blank Database என்ற ஐக்கானை தட்டுங்கள்
பிறகு அதன் வலது புறத்தில் Database1 என்று எழுத்தப்பட்ட பகுதியில் உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். நான் Accounts என்று பெயர் கொடுத்திருக்கிறேன்
பிறகு Create என்ற பட்டனை அழுத்துங்கள் உடனே உங்களுக்கு கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்
அதில் மேல் குறிப்பிட்ட View என்ற பட்டனை அழுத்துங்கள்
உடனே உங்களுக்கு டேபில் பெயர் எழுதச்சொல்லி ஒரு தட்டு ஓப்பன் ஆகும் அதற்க்கு Party Master என்று பெயர் இட்டுக்கொள்ளுங்கள்
பிறகு Party Master Design View திறந்துகொள்ளும் அதில் ID என்ற இடத்தில் PartyID என்று மாற்றிக்கொண்டு மேலும் PartyCode, PartyName என்பதையும் எழுதிக்கொள்ளுங்கள்
PartyID - AutoNumber ( இந்த AutoNumber என்பது ஒவ்வொரு ரிக்கார்டிற்க்கும் தானாக அடுத்தடுத்து ஒரு நம்பரை உருவாக்கிக்கொள்ளக்கூடியது)
PartyCode - Number ( இந்த Number என்ற Data Type ஐ நீங்கள் பயன்படுத்தினால் எண்களை மட்டும்தான் இந்த பகுதி டைப் செய்ய ஏற்றுக்கொள்ளும் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது)
PartyName - Text ( இந்த Text என்பது எண்கள் மற்றும் எழுத்துக்கள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்)
சரி இதை டைப் செய்து முடிந்ததும் படத்தில் காட்டியது போல PartyName என்ற தலைப்பில் உங்கள் மவுசை வைத்து வலது புறம் கிளிக் செய்து Save என்ற பட்டனை அழுத்துங்கள் பிறகு அதே போல வலது புறம் அழுத்தி Close என்ற பட்டனை அழுத்தி அதை மூடிவிடுங்கள்
பிறகு படத்தில் கான்பதுபோல நீங்கள் உருவாக்கிய Party Master என்ற டேபில் உங்களுக்கு திறந்து கொள்ளும்.
அதன் பிறகு மேலே படத்தில் உள்ளதுபோல Party Code, Party Name என்ற இடத்தில் சில பெயர்களை டைப் செய்யுங்கள்
டைப் செய்து முடித்ததும் முன்பு செய்தது போல PartyName என்ற தலைப்பை கிளிக் செய்து Close என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்
அடுத்து கீழே படத்தில் உள்ளதுபோல Access தலைப்பில் உள்ள Create என்ற பட்டனை அழுத்தி Table என்ற பட்டனையும் தட்டுங்கள்
உடனே இந்த படத்தில் உள்ளதுபோல Table Name கேட்க்கும்
இதற்க்கு Transactions என்ற பெயர் டைப் செய்துவிட்டு Ok பட்டனை அழுத்துங்கள்
பிறகு முன்பு செய்ததுபோல Transactions Table Design view திறந்து கொள்ளும்
இந்த Design View ல் TrscID (AutonNumber), TrscDate (Date/Time), TrscDescription (Text), Debit (Currency), Credit(Currency) போன்றவற்றை டைப் செய்துகொள்ளுங்கள்
இதில் TrscDate என்று டைப்செய்து Data Type ல் Date/Time செலெக்ட் செய்தபிறகு கீழே படத்தில் காட்டியதுபோல General Tab ல் Input Mask என்ற இடத்தில் 99/99/9999 என்று டைப் செய்துகொண்டால் நீங்கள் தேதி இடும்போது அதன் தேதி மாதம் வருடம் பிரித்து காட்டும் அளவிற்க்கு ஒரு Mask ஐ உருவாக்கும்.
அடுத்து இந்த Transactions டேபிளின் இறுதியாக Party Master என்ற டேபிளை இனைக்கும் நேரம் வந்துவிட்டது. கீழே உள்ள படத்தை பாருங்கள்
Credit என்ற Row ஐ அடுத்து Currency க்கு கீழே நீங்கள் Field Name ல் வேறு எதுவும் டைப் செய்யாமல் Data Type க்கு சென்று அதன் சிறிய ஆரோவை கிளிக் செய்து Lookup Wizard என்ற இடத்தை தட்டுங்கள்
உடனே உங்களுக்கு இந்த தட்டு ஓப்பன் ஆகும்
இதில் Next ஐ அழுத்துங்கள்
அடுத்து உங்களுக்கு கீழே உள்ள படத்தில் காண்பதுபோல நீங்கள் உருவாக்கிய Party Master என்ற டேபில் தெரியும் அப்படி தெரிந்தால் நீங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் Access Project சரியான முறையில் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
சரி இதிலும் Next ஐ அழுத்துங்கள்
இப்பொழுது உங்களுக்கு கீழ் கானும் படத்தில் கான்பதுபோல PartyCode, PartyName என்று எழுதப்பட்ட Fields உங்களுக்கு தெரியும்
இதில் முதலில் PartyCode என்பதை மவுசால் தொட்டு அதன் அருகில் உள்ள முதலாவதாக உள்ள Single Arrow பட்டனை தட்டுங்கள்
பிறகு Party Name என்ற Field ஐ செலெக்ட் செய்து மறுபடியும் Single Arrow ஐ தட்டுங்கள்
இப்பொழுது உங்கள் Lookup Wizard Table ல் வலது புறத்தில் Selected Fields ல் PartyCode, PartyName ஆகிய இரண்டும் தேர்வு ஆகி இருக்கும்.
அடுத்து Next ஐ அழுத்துங்கள்
உங்கள் ஆர்வத்தை பொருத்து இதன் தொடர்ச்சியை பாகம் இரண்டில் தொடர்கிறேன்
Is It Worth Playing At a Casino?
பதிலளிநீக்குPlaying casino 시스템 배팅 games is fun, but 슬롯 머신 how do you know whether you can win real money 넷마블바카라 playing 벳 삼육오 at a casino? That's the important aspect of 한게임 포커 why it's worth it.