பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழச்சியால் முகநூலுக்கு (facebook) இணையாக “நட்புவளையம்” www.natpuvalayam.com எனும் ஒரு சமூகவலை இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது.
இதன் முகப்பு பக்கம் ஏறக்குறைய முகநூல் போலவே காட்சி அளிக்கிறது. மேல் பக்கம் அதே நீல கலர் சற்றே மாறுபட்டு பட்டி உள்ளது. உள்நுழை விவரங்கள் மற்றும் புதிய கணக்கை உருவாக்கும் பகுதியும் முகநூல் படிதான் உள்ளது.
நடுவில் உலக வரைபடம் நட்பு வளையத்தை இணைக்கும் விதமாக அமைந்து உள்ளது. கீழ் பக்கம் ஏற்கனவே நட்பு வளையத்தில் இணைந்தவர்களின் புகைபடத்தோடு அவர்களின் சுயவிவர சுட்டியை தாங்கி உள்ளது.
அதற்கும் கீழே இரண்டு விளம்பரங்கள் மற்றும் இத்தளத்தின் விவரங்கள் ஃபுட்டர் பகுதில் இடம் பெறுகிறது.
எங்கே நட்பு வளையத்தை நீங்களும் உபயோகித்துப் பாருங்கள்.
தமிழன் எங்கிருந்தாலும் பெருமைதான்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக