தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-06-28

பேஸ்புக்கில் நண்பர்களால் போட்டோ Tag செய்வதை தடுப்பது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தும் அதிகமானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நம் நண்பர்களால் போட்டோTag செய்வதுதான் நாம் பேஸ்புக்கில் முன் பின் தெரியாதவர்களெல்லாம் நண்பராக இணைத்து விடுவோம் அவர்களில் சிலர் போலியாகவும் இருக்கலாம் இவர்கள் அவர்களுடைய பேஸ்புக்Timeline பக்கத்தில் போட்டோக்களை Uploadசெய்து நமக்கும் Tag செய்துவிடுவார்கள் அது நமது அனுமதி இல்லாமலே நமது Timeline பக்கத்தில் பதிவாகிவிடும்


நமக்கு சம்பந்தப்பட்ட போட்டோவாக இருந்தால் பரவாயில்லை தவறான போட்டோவாக இருந்தால் அதை நமது வேறு நண்பர்கள் யாரும் பார்த்தால் சிலவேளை அவர்கள் நம்மை தவறக புரிந்துகொள்ளவும் வாய்ப்புண்டு.


சரி நம் பாதுகாப்புக்காக இந்த போட்டோ Tag செய்வதை தடுப்பது நமக்கு நல்லது தானே? எப்படி என்று பார்ப்போம்.


1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் Log In செய்துகொள்ளவும் பின்பு Home -க்கு பக்கத்தில் உள்ள Setting Icon-இல் கிளிக் செய்து Privacy Settings ஐ தெரிவு செய்யவும்.






2.இப்பொழுது உங்கள் Privacy Settings பக்கத்தில் Timeline and Tagging என்பதை கிளிக் செய்யவும்.



3.Timeline and Tagging Settings பக்கத்தில் Who can add things to my timeline?என்பதற்கு நேரே இரண்டாவதாக உள்ள Review posts friends tag you in before they appear on your timeline?என்பதில் Edit ஐ கிளிக் செய்யவும்.






4.பின்பு வரும் பக்கத்தில் கீழே படத்தில் உள்ளாவாறு Disabled என்று இருக்கும் அதில் கிளிக் செய்து Enabled என்பதை கொடுத்து Closeசெய்துகொள்ளவும் அவ்வளவுதான்.

5. இனி உங்களுக்கு யார் போட்டோ Tag செய்தாலும் உங்கள் Timeline பக்கத்தில் நேரடியாக பதிவாகாது கீழே படத்தில் உள்ளதுபோல் Notification வரும் அதில் கிளிக் செய்தால் Timeline Review பக்கத்திற்கு செல்லும்.


6.Timeline Review பக்கத்தில் Tag செய்யப்பட்ட போட்டோவை கான்பிக்கும் அதில் கீழே படத்தில் உள்ளது போல் Add to Timeline மற்றும் Hide என்று இரண்டு Optionsஇருக்கும் அதில் Tag செய்யப்பட்ட போட்டோ உங்களுக்கு பிடித்திருந்தால் Add To Timeline என்பதை கொடுத்து உங்கள் Timeline பக்கத்தில் தெரிய வைக்கலாம்.

7.Tag செய்யப்பட்ட போட்டோ பிடிக்கவில்லை என்றால் Hide என்பதை கொடுக்கவும் Hide என்பதை கொடுத்தவுடன் அதே இடத்தில் Report/Remove Tagஎன்றுவரும் அதில் கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் I want to untag myself என்பதில் Mark வைத்து Continue கொடுக்கவும் இனி போட்டோவில் இருந்து உங்களுடைய Tag Remove ஆகிவிடும் உங்களுக்குNotification வரும் தொல்லையும் இனி இருக்காது 




இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக