தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-02-18

வேர்டில் எக்ஸெல் ஒர்க் சீட்டை இணைத்தல்

வேர்ட் தொகுப்பில் எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை இணைக்கலாம். இதற்கு வழி தரும் வகையில் ஐகான் ஒன்றை அதில் அமைத்துக் கொள்ளலாம். இதற்கான வழி முறைகள்: டூல் பாரில் (Tools menu in toolbar) டூல்ஸ் மெனுவில் கிளிக் செய்திடவும். 
அடுத்ததாக Customize என்பதில் கிளிக் செய்திடவும். Customize டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் அதில் 
Commands என்னும் டேபைத் திறக்கவும். கிடைக்கும் பிரிவுகளில் Categories என்னும் பிரிவில் Insert என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Commands என்பதன் கீழாக Insert Microsoft Excel Worksheet என்று இருப்பதில் கிளிக் செய்து அப்படியே இழுத்துச் சென்று உங்களுடைய டூல் பாரில் எங்கு எக்ஸெல் ஒர்க் ஷீட்டுக்கான பட்டன் இருக்க வேண்டுமோ அங்கு விட்டுவிடவும். இனி இணைப்பதற்கான எக்ஸெல் ஒர்க் ஷீட் பட்டன் அங்கேயே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக