தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-02-18

பாராக்களை ஒரே பக்கத்தில் அமைத்தல்

சில குறிப்பிட்ட வகை டாகுமெண்ட்களில் அமைக்கப்படும் சில பாராக்கள் ஒரே பக்கத்தில் அமைய விரும்புவோம். சட்ட விதிமுறைகள் சார்ந்து தயாரிக்கப்படும் ஆவணங்கள், சில வர்த்தக ஒப்பந்த கடிதங்கள், வரைவு ஆவணங்கள் ஆகியனவற்றை இந்த பிரிவில் இருக்கும். இவற்றில் எப்படி குறிப்பிட்ட பாராக்களை ஒரே பக்கத்தில் அமைப்பது எனப் பார்க்கலாம்.

வேர்ட் 2007ல் அமைக்க:

1. ஒரே பக்கத்தில் அமைக்க வேண்டிய பாரா அல்லது பாராக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே ஒரு பத்தி எனில், அதில் கர்சரை அமைத்தால் போதும்.
2. ரிப்பனில் Home என்பது காட்டப்படட்டும்.
3. Paragraph குரூப் என்பதன் கீழ் வலது பக்கம் உள்ள சின்ன ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. Line and Page Breaks டேப்பினைக் காட்டவும்.
5. Keep Lines Together என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
6. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பழைய வேர்ட் தொகுப்பில் மேற்கொள்ள வேண்டியது:

1. ஒரே பக்கத்தில் அமைக்க வேண்டிய பாரா அல்லது பாராக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே ஒரு பத்தி எனில், அதில் கர்சரை அமைத்தால் போதும்.

2. Format மெனுவில் இருந்த Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.

3. Line and Page Breaks டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Keep Lines Together என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் பிரிக்காமல், ஒரே பக்கத்தில் அமைய வேண்டிய பாராக்கள் அதே பக்கத்திலேயே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக