ஆன்லைன் மூலம் ஸ்டிக் மேன் அனிமேசன் உருவாக்க விரும்புபர்களுக்கு உதவியாக பயிற்சி எடுத்து பழகுவதற்கு ஒரு தளம் உள்ளது இத்தளம் மூலம் நாம் எளிதாக படம் வரைந்து அனிமேசன் செய்து பார்க்கலாம்.
படம் 1
பிளாஷ் அனிமேசன் படித்துக்கொண்டிருப்பவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமாக வரைந்து அனிமேசன் செய்து பார்த்து எப்படி இருக்க வேண்டும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உடனடியாக எப்படி எல்லாம் அனிமேசன் செய்தால் நன்றாக இருக்கும் என்று காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது…
ஆன்லைன் மூலம் ஸ்டிக் மேன் அனிமேசன் உருவாக்க விரும்புபர்களுக்கு உதவியாக பயிற்சி எடுத்து பழகுவதற்கு ஒரு தளம் உள்ளது இத்தளம் மூலம் நாம் எளிதாக படம் வரைந்து அனிமேசன் செய்து பார்க்கலாம்.
படம் 1
பிளாஷ் அனிமேசன் படித்துக்கொண்டிருப்பவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமாக வரைந்து அனிமேசன் செய்து பார்த்து எப்படி இருக்க வேண்டும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உடனடியாக எப்படி எல்லாம் அனிமேசன் செய்தால் நன்றாக இருக்கும் என்று காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.drawastickman.com/index.htm
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் White board-ல் நாம் அனிமேசன் செய்ய விரும்பும் படத்தை வரைய வேண்டும். வரைந்து முடித்த பின் அங்கு இருக்கும் Done என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் வரைந்த படத்தின் ஸ்டிக் மேன் அனிமேசன் பார்க்கலாம்.அடிப்படையில் இது செயல்படுவது Background அனிமேசன் தான் என்றாலும் நாம் White board-ல் வரைந்த புகைப்படத்தை அப்படியே ஒரு படமாக சேர்த்து நமக்கு நாம் வரைந்த படம் அனிமேசன் ஆவது போல் இருக்கிறது. ஆரம்ப நிலையில் அனிமேசன் கற்க விரும்புபவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக