வலைபக்கங்களில் நாம் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, நமக்கு தேவையான சில விபரங்கள் Table வடிவில் இருக்கலாம்.
இவற்றை நாம் Excel 2007 பயன்பாட்டில் தேவைப்படும் பொழுது வலைப்பக்கத்திலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யும்பொழுது, டேபிள் வடிவில் அல்லாமல், ஒரு அமைப்பில்லாமல் பேஸ்ட் ஆகியிருப்பதை கவனிக்கலாம்.
இது போன்ற சமயங்களில், இணையத்தில் நமக்கு தேவையான விவரங்கள் அடங்கிய டேபிளை Excel 2007 -இல் எப்படி இறக்குமதி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்ட டேபிள் உள்ள பக்கத்தின் url ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். Excel ஐ திறந்து கொண்டு Data டேபில் உள்ள Get External Data பகுதியில் உள்ள From Web பொத்தானை சொடுக்குங்கள்.
இப்பொழுது திறக்கும் New Web Query வசனப் பெட்டியில், அட்ரஸ் பாரில் காப்பி செய்து வைத்த url ஐ பேஸ்ட் செய்து Go பொத்தானை சொடுக்குங்கள்.
இப்பொழுது அந்த url க்கான வலைப்பக்கம் Query திரையில் திறக்கும். இங்கு தேவையான Table க்கு மேற்புறமுள்ள மஞ்சள் நிற பெட்டியை க்ளிக் செய்வதன் மூலம் அந்த table ஐ தேர்வு செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை தேர்வு செய்து கொள்ள இயலும்.
Import பொத்தானை சொடுக்கிய பிறகு Excel sheet -இல் எந்த செல்லில் இந்த டேபிளை இருத்த வேண்டும் என்று தேர்வு செய்து கொண்டு, OK பொத்தானை சொடுக்குங்கள்.
இதோ உங்களுக்கு தேவையான டேபிள் இப்பொழுது உங்கள் எச்செல் ஷீட்டில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக