Windows has been shut down to prevent damage to your computer என்ற செய்தியுடன் நீலத்திரைப் பிழை (Blue Screen Error, Blue Screen of Death-BSOD) சில சமயம் கருந்திரையாகவும் (Black Screen) வருவதுண்டு. இது பல காரணங்களால் வருகிறது. விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் இப்படியான தவறுகள் லீனக்ஸ் கணினிகளில் வருவதில்லை. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
Page Fault error எனப்படும் 0×00000050 என்பது Blue Screen of Death (BSOD) எனவும் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. Hard Disk, ட்ரைவர்(Device Driver), சில மென்பொருள் காரணமாக, இயங்கிக் கொண்டிருக்கும் கணினியில், தரவுகள்(data) அழியாமலும், கணினியைக் காப்பதற்காகவும் கணினி நீல நிறத் தவறு (Blue Screen Error ) எனக் காட்டி கணினி இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.
Hard Diskல் ஏற்பட்ட பிழைகள் மற்றும் இணைக்கப்பட்ட வன்பொருள் பழுதடைந்த அல்லது சரியாக இயங்காத அல்லது நிரம்பியுள்ள நிலையில் உள்ள RAM நினைவகம், அதைத் தொடர்ந்து CPU என்ற செயலகம் செயலில் ஈடுபட தேவையான நினைவக இடம் இல்லாத நிலையிலும் (RAM memory, L2 RAM cache, video RAM), NTFS போர்மட்டில் ஏற்பட்ட தவறும், ஆன்டிவைரஸ் மென்பொருள் காரணமாகவும், சிஸ்டத்தில் ஏற்பட்ட தவறும் எனப் பல காரணங்களால் கணினி BSOD ஐக் காட்டி நின்று விடுகிறது. பொதுவாக மென்பொருளை விட, Hard Diskலும், RAM நினைவகத்திலும் ஏற்படும் தவறுகளே அதிகமாக BSOD தவறுகளுக்கு காரணமாகி விடுகிறது.
இதை சரி செய்ய சில வழிகள்:
எந்த காரணமாக இருந்தாலும் முதலில் கணினியை Restart செய்து விடலாம். இதன் மூலம் முன் இருந்த நிலைக்கு செல்லலாம்.
கடைசியாக இன்ஸ்டால் ஆன மென்பொருளை அப்டேட் செய்யலாம் அல்லது நீக்கலாம்.
Hard Diskல் ஏற்படும் தவறுகளை Run சென்று “Chkdsk /f /r” என்று கொடுத்து சரி செய்து கொள்ளலாம்.
Safe mode இல் தொடக்கி, சில startup program களை நீக்கி சரி செய்யலாம். தற்காலிக நினைவகத்தை (RAM+Page File) அதிகரிக்கலாம்.
RAM ஐக் கழற்றி சுத்தம் செய்து திரும்ப இணைக்கலாம்.
Device பாதை (IRQ) வேறொரு பாதையில் மாறி, conflict ஏற்பட்டால் Device manager சென்று மஞ்சள் குறியீடு உள்ளதா எனப் பார்த்து update அல்லது திரும்ப இன்ஸ்டால்(uninstall / install ) செய்து கொள்ளலாம்.
System Drive களில் தவறுகள் என சந்தேகப்பட்டால் Safe mode போகும் போது உள்ள ஆப்சனில் Last Known Good Configuration என்பதில் சென்று சரி செய்யலாம். System Service களில் தவறு என்றால், Control Panel -Administrative Tools- Services இல் சந்தேகத்திற்குரியதை நிறுத்தி(disable) வைக்கலாம். sfc scanம் செய்யலாம். Startup Repair செய்யலாம். இந்த BSOD தவறை சரிசெய்ய சிலர் பல சமயங்களில் முற்றாக புதிதாக இயங்குதளத்தை நிறுவியும் இருக்கின்றனர்.
கடைசியாக கணினியில் என்ன செய்தீர்கள் என்பதை ஞாபகப்படுத்தினாலே, கணினியில் ஏற்படும் பல தவறுகளை சரி செய்து விடலாம். BSOD பிழைகளின் போது stop code திரையில் வரும்.அதை வைத்தும் பிழைகள் என்ன என்பதைக் கண்டறிய முடியும்.
[இதைவிட நமக்கு வேண்டாதவர்கள் பக்கத்தில் இருந்து தொண தொண என்று பேசிக் கொண்டு நம் கணினியில் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்தினால் தற்காலிகமாக ஒரு Blue Screen ஐ உருவாக்கி, கணினி பழுது என்று சொல்லித் தப்பித்தும் விடலாம்!!]
இந்த நிலையில் RAM-நினைவகம் மற்றும் Hard Diskல் உள்ள Page File-Virtual memory பற்றி சிறிதாவது தெரிந்து கொள்வது சிறந்ததாகும். கண்டது கற்றது பண்டிதன் ஆவான்.
RAM இல் ஏற்படும் பிழைகள் பொதுவாக page file ற்கும் nonpaged area விற்கும் இடையில் ஏற்படும் தொடர்பின்மை காரணமாக ஏற்படுகிறது. RAM இல் உள்ள nonpaged area வில் அந்தச் சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லா செயல்களையும் RAM தயார் நிலையில் வைத்திருக்கும். அதே சமயம் Page File-memory இல், இயங்கத் தேவையான பக்கங்களின் விபரங்களையும், தகவல்களையும் RAM சேமித்து தயார் நிலையில் வைத்திருக்கிறது. nonpaged area-memory இல் தயாராக இருக்கும் செயல் ஒன்றை செயல்படுத்த RAM என்ற நினைவகம் Page File இல் உள்ள பக்க விபரங்கள், தகவல்களை பெறும் நோக்குடன் அதன் உதவியை நாடுகிறது. அப்போது Page File-memory ஆல் கொடுக்க முடியாது என்றால், CPU மேற்கொண்டு செயலாற்ற (Process) முடியாத நிலையில், கணினியை காப்பாற்றவும், தரவுகளை அழிந்து போகாமல் தடுக்கவும் CPU-செயலகம் கணினியை நிறுத்தி விடுவதால் இந்த Blue Screen Error வருகிறது. இதற்கு RAM -physical memory யும் Page File -Virtual memory யும் போதாமை அல்லது தொடர்பின்மை காரணமாக இருக்கிறது.
RAM இரண்டு விதமாக செயல்படுகிறது. ஒன்று கணினியின் Motherboardல் இணைக்கப்பட்ட RAM-Physical Memory, இன்னொன்று Hard Diskல் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Virtual memory (Page File) ஆகும்.
Hard Diskல் வைத்து வேலை பார்ப்பதைவிட, RAM நினைவகத்தில் வைத்து வேலை பார்ப்பது சுலபமானதும், வேகமானதும் ஆகும். உதாரணமாக பிரவுசர் மூலம் கற்போம் தளத்தை படிக்க அல்லது YouTube வீடியோவைப் பார்க்க செல்வோமானால், முதலில் அவை RAM நினைவகத்தில் தரவிறக்கப்பட்டு சேமித்து பின்னர் நமது பார்வைக்குத் தருகிறது. முடிந்ததும் அடுத்து வரும் வேலைகளைத் தொடருவதற்காக இவற்றை அழித்து விடுகிறது. Cookie என்ற ஒரு சிறிய file மட்டும் அடுத்த முறை இணையத்தில் இலகுவாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்வதற்காக, பிரவுசரில் சேமிக்கப்படுகிறது.
இப்படி தரவுகளோ வீடியோக்களோ,படங்களோ தரவிறக்கப்பட்டு RAM நிரம்பிவிடும் போது, சிலவற்றை Hard Diskல் உள்ள Page File (virtual memory) இல் சேமிக்கப்படுறது. ஒரு ப்ரொகிராம் சிறிதாக்கப்படும்(minimize) போது அல்லது அதிக நேரம் பயன்படுத்தப்படாதபோது, page file இல் இருப்பவை RAM ற்கு மாற்றப்படுகிறது. மீண்டும் பெரிதாக்கும் (maximize ) போது மீண்டும் அவை page file ற்கு செல்கிறது. இந்த செயலை நாம் கணினியில் உள்ள பச்சை நிற led-light விட்டு விட்டு எரிவதில் இருந்து காண முடியும்.
அதே போல் பெரிய ப்ரொகிராம் ஒன்று வேலை செய்யும் போது, Hard Diskல் உள்ள page file ஐ கணினி பயன்படுத்துவதால் சிறிது வேகம் குறைகிறது. இதைத் தவிர்க்க தேவையற்ற ஒரு செயல் backgroundல் இயங்குமானால் (Taskbar manager இல் பார்க்க முடியும்), அதை முற்றாக நிறுத்தி விடுவதால் கணினியை வேகமாக்க முடியும். RAM ஐ upgrade செய்வதாலும் வேகத்தை அதிகரிக்க முடியும். சிலர் Page File ஐ நீக்கி(disable) விடுவதால், வேகம், performance அதிகரிக்கும் என்று சொல்வது தவறான விளக்கமாகும். இது தவிர இரண்டு Hard Disk இருக்கும் கணினிகளில் page file இரண்டாவது Hard Diskற்கு மாற்றினால், இரண்டு Hard Diskகள் ஒரே சமயத்தில் வேலை செய்வதால் வேகம் குறையும். ஒரே Hard Diskல் வேறு பிரிவில் (partition) page file வைத்திருந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது.
கணினியைத் தொடக்கவும், தொடர்ந்து கணினியில் உள்ள செயலிகள் மற்றும் அனைத்தும் முறையாக இயங்கவும், P-RAM (Physical- Random Access Memory ) என்ற தற்காலிக நினைவகம் தேவைப்படுகிறது. இந்த P-RAM ற்கு உதவும் நோக்குடன், கணினியின் Hard Diskல் உள்ள வெற்றிடத்தில் (free space ) இருந்து உருவாக்கப்பட்ட Page File (V-RAM -Virtual memory ) பயன்படுத்தப்படுகிறது. கணினி செயல்கள் அதிகரித்து செயல்படாமல் அல்லது வேகம் குறையும் போது RAM ல் உள்ள தரவுகளை, விபரங்களை Hard Diskல் உருவாக்கப்பட்ட நினைவக சேமிப்பில் (Page File) தற்காலிகமாக சேமித்து பின் திரும்பப் பெறுகிறது. Hard Diskல் உருவாக்கப்படும் நினைவகத்தை (Virtual Memory -Page File), விண்டோஸ் தானியங்கியாக அமைத்துக் கொண்டாலும் கூட, நாம் நமக்கு வேண்டிய வகையில், நமது Hard Diskல் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்து மாற்றி அமைக்க முடியும். மாற்றி அமைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
Start – Control Panel – System and Maintenance -System - Advanced system settings -Advanced tab- Performance -Settings -
Advanced – Virtual memory – Change- Automatically manage paging file size for all drives -Maximum size (நமக்கு வேண்டியபடி)- OK
இந்த அளவு RAM அளவின் 1.5 மடங்கு (குறைந்த அளவு) ஆகும். கணினி Hard Diskன் காலி இடத்தைப் பொறுத்து மூன்று -நான்கு மடங்கு வரை அளவை (maximum) அதிகரிக்கலாம்.
உதாரணமாக. RAM=512MB; Virtual Memory 512 x 1.5 = 768 MB ல் இருந்து 512 x 4 = 2048 வரை (Hard Disk ல் போதுமானfree space இருந்தால்) அதிகரிக்கலாம். இருப்பினும் 1GB க்குக் குறைந்த RAM ஆக இருந்தால், குறைந்த அளவு 1.5மடங்கும், அதிக அளவு 3 மடங்கும் சிறந்ததாகும். 1 GB க்கு மேலாயின் குறைந்த அளவு 1 மடங்காகவும்,அதிக அளவு 3மடங்காகவும் இருப்பது சிறந்ததாகும்.
(Virtual Memory = Swap File = Page File ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக