தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-10-06

சம்பியனாகியது மும்பை இந்தியன்ஸ்


ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 202 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து 33 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 5 ஆவது சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது.
ஆரம்பமே தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த ராஜஸ்தான் கிண்ணத்தை கைப்பற்றும் வாயப்பை நழுவவிட்டது.

நேற்றைய போட்டியுடன் கிரிக்கெட் அரங்கில் வர்ண உடைக்கு விடைகொடுக்கும் இந்திய அணியின் மாஸ்டர் பட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கருக்கு சிவப்பு கம்பளம் விரித்து மைதானத்தில் சிறப்பு வரவேற்பு அழிக்கப்பட்டது.

5 ஆவது சம்பியன்ஸ் லீக் இருபது-20 தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப்பெற்றது. .

டெரன் ஸ்மித்துடன் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சினள் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஆரம்பமே அதிர்ச்சியளித்த போதிலும் ஸ்மித் (44), ராயுடு (29), ரோகித் சர்மா (33), மெக்ஸ்வெல் (37) மற்றும் கிரன் போலர்ட் (15) தினேஷ் கார்த்திக் (15) ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைய ஸ்திரப்படுத்தினர்.

இதனையடுத்து 203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கிண்ணத்தை கைப்பற்றும் வாயப்பை நழுவவிட்டது.

ரஹனே (65), சாம்ஷன் (60) ஆகியோர் அரைச்சதங்களை அடிக்க ஏனைய வீரர்கள் 10 ஓட்டங்களைக்கூட தாண்டாது ஏமாற்றமளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக