தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-02-18

MS WORD TIPS - டேப் அளவினை மாற்ற

வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்க முயற்சிக்கையில், அதில் டேப் செட்டிங்ஸ் முதலில் மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். வேர்டில் மாறா நிலையில் அரை அங்குல அளவில் டேப் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் டேப் பட்டனைத் தட்டி, கர்சர் செல்லும் அளவினைக் கண்டு இதனை உணரலாம். ஆனால், இந்த செட்டிங் பல ஆண்டுகளாக வேர்டில் மாறா நிலையில் இருந்து வருகிறது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக, 
நீங்கள் இதனை மாற்ற வேண்டும் என எண்ணினால் அதற்கும் வழி உள்ளது. மாற்ற கீழ்க்காணும் வழிகளைக் கையாள வேண்டும்.


1. ஹோம் டேப்பில் முதலில் கிளிக் செய்திடவும். பாரா குரூப் டயலாக் லாஞ்சரில் அடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், பார்மட் மெனு சென்று டேப் தேர்ந்தெடுக்கவும்.
2. கீழாக இடது மூலையில் உள்ள டேப்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.
3. மாறா நிலையில் உள்ள டேப் அளவினை .50 லிருந்து .25க்கு மாற்றவும். இன்னும் பல அளவுகளை மாற்றுவதற்கு வழிகள் தரப்பட்டிருப்பதனை நீங்கள் காணலாம். விருப்பம் இருப்பின் அவற்றையும் மாற்றி, என்ன நிகழ்வுகள் ஏற்படுகின்றன எனப் பார்க்கலாம்.
4. அனைத்தும் மாற்றிய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், ஒவ்வொரு டேபின் அளவும் அரை அங்குலத்திற்குப் பதிலாக, கால் அங்குல அளவில் இருக்கும். இதனை இன்னும் சிறிதாகவோ அல்லது பெரியதாகவோ அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக