தேடல்

கற்றதை கற்பித்தல்

2012-12-15

Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி



இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம்.


1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.


3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம்.







4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம்.


5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.


நான் பயன்படுத்தும் Talking Tom,






உங்களிடம் Android Phone இருந்தால்,


6. உங்கள் Android Phone - ஐ இந்த மென்பொருள் உடன் இணைக்க முடியும். வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் "Cloud Connect" என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் "Do you have a Android Phone" என்பதற்கு Yes தெரிவு செய்து Next கொடுங்கள்.


7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று வந்திருக்கும்.


8. இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone - இல் நீங்கள் BlueStacks Cloud Connect என்ற Application - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


9. Application - ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம்.





10. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும்.





இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.


11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை.


இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

1 கருத்து:

  1. அன்புடையீர் வணக்கம்.
    என்னிடம் ஆன்ட்ராய்டு போன் இல்லாத சமயத்தில் கடந்த நவம்பர் மாதம் எனது லேப்டாபில் BlueStacks ஐ இன்ஸ்டால் செய்து இயக்க ஆசைபட்டேன்.
    ஆனால் ஆன்ராய்டைப் பற்றி அப்போது எனக்கு தெரியாத காரணத்தால் இயக்கத் தெரியவில்லை.10.15 நாட்கள் பிறகு அதனை அன்இன்ஸ்டால் செய்து விட்டேன்.
    தற்போது சாம்சங் ஆன்ட்ராய்ட்போன் வாங்கி ஓரளவு அதனை தெரிந்து கொண்ட பிறகு மறுபடியும் எனது லேப்டாபில் BlueStacks இன்ஸ்டால் செய்ய தங்களது பதிவு வழியாக முயற்சித்தேன்.
    எல்வாம் சரியாக தரவிறக்கம் ஆகிறது.ஆனால் இன்ஸ்டால் ஆகும் போது தங்களது சிஸ்டத்தில் பழைய வெர்சன் இன்ஸ்டால் ஆகி உள்ளது என Exit ஆப்சனுடன் முடித்துக்கொள்கிறது.சிஸ்டத்துக்குள் ஏதோ ஒரு இடத்தில் பழைய வெரசனின் லெப்ட்ஓவர் பைல் ஒன்று உள்ளது என கருதுகிறேன்.
    அதனை எப்படிக் கண்டு பிடித்து நீக்குவது?
    அதற்கான வழியை எனக்கு தரவும்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு