அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருள் புகைப்படத்தை
அழகுபடுத்த மட்டுமல்ல. நாம் விரும்பும் வண்ணம் புது புகைப்படம்
உருவாக்கவும் தான். போட்டாஷாப்பில் பல துனை கருவிகள்
இருந்தாலும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய பிரஸ் டூல் -ஐ
எளிதாக எங்கிருந்து எளிதாக எப்படி தரவிரக்கலாம் என்பதைப்பற்றித்
தான் இந்த பதிவு.
வால்பேப்பர் உருவாக்குவதில் இருந்து இருக்கும் படத்திற்கு பறவைகள்,
மேகம், புல் வெளி என அனைத்தையும் சேர்த்து மேலும் மேலும்
அழகுட்டத்தான் போட்டோஷாப்-ன் இந்த பிரஷ் டூல் நமக்கு அதிகமாக
பயன்படுகிறது. இப்படி பல வித வேலைகளை எளிதாக்கும் இந்த பிரஷ்
டூல்-ஐ தரவிரக்க பல இணையதளங்கள் இருந்தாலும் மிக அறியவகை
பல பிரஷ்களை தன் இணையதளத்தின் மூலம் தேடி கொடுக்க ஒரு
இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://findbrushes.com
முகப்புபக்கம் பார்ப்பதற்கு கூகுல் போல் எளிமையாகவே இருக்கிறது.
இந்த தளத்திற்க்கு சென்று நாம் எந்த மாதிரி பிரஷ் வேண்டுமோ அதன்
பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில நொடிகளில் முடிவுகள்
கொடுக்கும் நமக்கு பிடித்த டூல் -ஐ தரவிரக்கிக்கொள்ளலாம். வகைகள்
என்ற பிரிவில் பல வகையான டூல் களை தனித்தனியாக குரூப் செய்தும்
வைத்துள்ளனர் இதற்கு Categories என்ற மெனுவை அழுத்தி நாம்
விரும்பும் வகையில் உள்ள டூல்-ஐயும் தரவிரக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக