தேடல்

கற்றதை கற்பித்தல்

2012-10-16

Android Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..!


தொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது செல்பேசி(Cellphone). அதன் பிறகு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு புதிய பிறப்பெடுத்திருக்கிறது புதிய செல்பேசிகள். அவற்றுள் குறிப்பிட்டு சொல்வதெனில் Android Mobiles சொல்லலாம்.

Android இயங்குதளங்களில் இயங்கி, இப்போது உலகத்தையே (இளைஞர்களை) இயக்கிக்கொண்டிருக்கிறது இந்த வகை மொபைல்கள். கணினியில் உள்ள அத்தனை வசதிகளையும் தற்போது உள்ளடக்கி விட்டது Smart Phone என்னும் இவ்வகை மொபைல்கள்.
கணினியைப் போன்றே இத்தகைய Smart Phone களும் செயல்படுவதால், அதாவது அவற்றிற்குரிய Data Storage, applications என புதியதொரு கட்டமைப் பெற்று இயங்குவதால் இவற்றிக்கும் வைரஸ் தாக்குதல்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தற்போது இதன் காரணமாக Smart Phone களுக்கும் நச்சு நிரலிகளையும் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். இலவசமாக கிடைக்கிறதென இணையத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யும்போது இவற்றுடன் உங்களுடைய Smart Phone களை பதம் பார்க்கும் வைரஸ் நச்சு நிரலிகளும் நல்லபிள்ளை வந்து அமர்ந்துகொள்கின்றன.

விலை மதிப்பு மிக்க Smart Phone, Android வகைப் போன்களை வைரஸ் தாக்குதலிலிருந்து காக்க சில மென்பொருள்கள் இருக்கின்றன. உங்கள் செல்போன்களில் உள்ள Data க்களையும், செயல்திறன்களையும் காக்க, கணினிகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை தருவதைப் போன்றே Smart Phone களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை பிரபல Anti Virus நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

iOS வகை செல்போன்களுக்கு இவை இலவசமாகவும், மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும் கிடைக்கிறது. உங்களுடைய Android Phone களுக்கு பொருத்தமான Anti Virus Software-களைப் பதவிறக்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


1. Avast Antivirus Protection


Android இயங்குகளில் இயங்கும் smart Phone களைப் பாதுகாக்க அதிக நம்பிக்கை தருவது இம்மென்பொருளாகும். கணினிகளை காப்பது போலவே இந்நிறுவனத்தாரின் இப்பதிப்பு உங்கள் Android Phone களையும் பாதுகாக்கிறது.

Softwares, Games, Malware போன்றவற்றிலிருந்து முற்றிலும் பாதுகாப்பளிக்கிறது. ஆன்ட்டி தெப்ட் (Anti Theft)எனும் தொழிற்படுதல் மூலமாக உங்களை Android தொலைபேசிகளை சிஸ்டர் ட்ரேயிலிருந்து 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாப்பை வழங்குகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க மென்பொருள் முற்றிலும் இலவசமே..!

Avast Antivirus Protection டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

இத்தளத்தில் Install என்ற பட்டனைச் சொடுக்கி Avast Mobile security application நிறுவிக்கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.avast.android.mobilesecurity&hl=en


2. kaspersky Mobile Security


பல்வேறு கணினி பயன்பாட்டாளர்கள் இம்மென்பொருளை தங்களுடைய கணினிகளில் நிறுவி இருப்பர். இதிலிருந்தே இம் மென்பொருளின் அருமையை நாம் உணரலாம். தரவு(Data protection) பாதுகாப்பு தருவதில் இது முதன்மையான மென்பொருள். Android Mobile களுக்கும் இம் மென்பொருள் அதி உயர் பாதுகாப்பை வழங்குகிறது.

இதில் இருவகை மென்பொருள்கள் உள்ளன. பயன்படுத்துபவர்களின் வசதிக்காக lite version மற்றும் paid version என இருவகையான மென்பொருள்களை வெளியிட்டுள்ளனர். கால் மேனேஜர் பாதுகாப்பு, வைரசிலிருந்து பாதுகாப்பு, மற்றும் உங்கள் செல்போன்களுக்கு வரும் SMS (Instant Messages)ஆகியவற்றில் Filter வசதியையும் தருகிறது. இலவச மென்பொருளே இத்தகைய வசதிகளைக் கொண்டிருக்கும்போது Paid version சொல்ல வேண்டுமா என்ன? Paid version -ல் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய நீங்கள் செல்ல வேண்டிய முகவரி:

https://play.google.com/store/apps/details?id=com.kms.free

இதிலுள்ள Install என்ற பட்டனைச் சொடுக்கி Kaspersky Mobile Security Lite இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


3. Norton Mobile security software


கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். வெகு காலமாகவே இம்மென்பொருள் கணினி பாவனையாளர்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. முன்னணி நிறுவனமான Norton கணினிகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை தருவதைப் போன்றே உங்கள் Android மென்பொருள்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைத் தருகிறது. உங்கள் android மொபைல்களுக்கு இதன் மூலம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.
மென்பொருளைத் தரவிறக்க செல்ல வேண்டிய சுட்டி:
https://play.google.com/store/apps/details?id=com.symantec.mobilesecurity

மேற்சொன்ன இரண்டு Antivirus Mobile security -யைப் போன்ற இப்பக்கத்திலும் உள்ள Install என்ற பட்டனைச் சொடுக்கி உங்கள் Android Mobile களுக்கான நச்சு நிரல் எதிர்ப்பியை நிறுவிக்கொள்ளுங்கள்.


4. NQ Mobile Security antivirus

கணினிகளுக்கு இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் பதியது. ஆனால் Android Phone பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பிரபலமான மென்பொருளாகும். Android Phone வருவதற்கு முன்பே symbian வகை தொலைபேசிகளுக்கான பாதுகாப்பை வழங்கியதன் மூலம் இது தனது பெயரை நிலைநாட்டிக்கொண்டது. தற்போது Android Phone வகை போன்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி:
https://play.google.com/store/apps/details?id=com.nqmobile.antivirus20


5. Dr Web Anti-Virus

இது பெயருக்கு ஏற்றாற்போலவே Android வகை Smart Phone களுக்கு அதிகப்பட்ச பாதுகாப்பை வழங்குகிறது. புதியதாக களத்தில் இறங்கியிருக்கும் இம்மென்பொருள் Smart Phone பயன்படுத்துபவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டிய அதிக வசதிகளையும், பாதுகாப்பினை கொடுக்க வேண்டி தனது Anti virus Application -ஐ அமைத்துள்ளது. தற்போது பிரபலமாக உள்ள மென்பொருள்களுக்கு ஈடாக தனது செயல்பாட்டினையும் கொண்டுள்ளது.

இம்மென்பொருளை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவ இங்கு செல்லவும்.

https://play.google.com/store/apps/details?id=com.drweb


6. Lookout Security and anti-virus

இந்த மென்பொருளின் சிறப்பே.. இது ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதுதான். Android வகை மென்பொருள்களை பாதுகாப்பதோடு, வைரசிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கூடுதல் வசதியாக உங்கள் Smart Phone -ஐ பேக்கப் எடுக்கும் வசதியையும், உங்கள் செல்போன் தொலைந்துபோனால் மீட்கப் பயன்படும் Phone finer வசதியும் இதில் உள்ளது.

இந்த மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:
https://play.google.com/store/apps/details?id=com.lookout

குறிப்பு: இத்தகைய Android Mobile Security மென்பொருள்கள் Google Play தளத்தில் கொட்டிக்கிடக்கிறது. தேவைப்படுவோர் இத்தளத்திற்கு சென்று, உங்களுக்கு விருப்பமான மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

குறிப்பு: தகவல் மற்றும் படங்கள் அனைத்தும் Google Play தளத்திலிருந்து எடுக்கப்பட்ட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக