இதனை சரிசெய்ய பல முறைகள் காணப்படுகின்றன. அதிகமானோர் இதனை அறிந்திருந்தாலும் அறிந்திறாதோருக்காக இப்பதிவை பகிர்கின்றேன். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
01. முறை
Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
அதில் gpedit.msc என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
பின் Group Policy Editor இல்
User Configuration சென்று Administrative Template என்பதில் System தெரிவு செய்து Ctrl + Alt + Del Optionஎன்பதை Click செய்யுங்கள்.
அங்கு Remove Task Manager என்பதை Double Click செய்து
அதில் Not Configured என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
02. முறை
Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
அதில் regedit என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
பின் அதில்
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
அதன் வலப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள DisableTaskMgr என்பதில் Right Click செய்துDelete செய்யுங்கள் பின் அதனை Confirm செய்து விடுங்கள்.
03. முறை
Task Manager Fix ஐ தரவிறக்கம் செய்து Run ( Double Click) செய்யுங்கள்
நீங்களும் Task Manager யை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.
அன்புடன்:- சிதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக